இயங்குகின்றன. இந்தக் கட்சிகளை 'அப்புராணிக் கட்சி' என்று ஒரு பாத்திரம் பேசுவதாகச் சித்தரிக்கப்படுகிறது. 'தன் அமைப்பைச் சாராதவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்ப்பது புரட்சிகர ஐக்கியத்தை உருவாக்காது" என்று வேறொரு கட்டுரையில் கருத்துத் தெரிவிக்கிற (வாழ்வி லிருந்து எனது இலக்கியம் - ப.11) இன்குலாப், அதாவது ஒரு புரட்சிகர ஐக்கியத்திற்காக அனைவரையும் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற இன்குலாப் இப்படி ஒரு குறிப்பைத் தனது பாத்திரத்தின் பேச்சில் அனுமதித் திருப்பது சரியாகப் படவில்லை.
அந்த 'அப்புராணிகள்' தானே இன்றைக்கும் இடதுசாரி இயக்கத்தினர் அனைவருக்கும் உத்வேகம் தருகிற புகழ்பெற்ற 'தெலுங்கானப்புரட்சி'யைச் செய்தவர்கள்... அந்த 'அப்புராணிகள்'தானே தோல்விகளுக்குப் பிறகும் துவண்டு விழாமல் சோதனைகளுக்குப் பிறகும் சோர்ந்து போகாமல் மக்கள் இயக்கங்களை, மகத்தான போராட்டங் களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
இன்குலாபுக்கு இது தெரியாதா என்ன?
சமுதாய மாறுதலை விரும்புகிற சிந்தனையாளன் "அரசு' என்பதை அம்பலப்படுத்தித்தான் ஆகவேண்டும். 'அரசு’ என்பது முதலாளித்துவத்தின் அடக்குமுறைக்கான ஒரு கருவி என்பது உண்மை. இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் 'அரசு' என்னும் 'அடக்குமுறைக் கருவி" எவ்வாறு மக்களுக்கு எதிராக இயங்குகிறது; அதன் வன்முறைச் செயலாட்டங்கள் 'காவல்துறை' மூலம் எவ்வாறு கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதைச் சித்திரிக்கிற கதைதான் 'கடத்தல்' என்னும் கதை.
121