மதம்' என்பது ஏறத்தாழ ஒரு குறுநாவல் போன்று அமைந்துள்ள கதை. இந்த மண்ணில் வாழும் மனிதர் களை, அவர்களது உணர்வுகளைச் சிறிதும் ஈவு இரக்க மின்றி இந்த 'மதம்' ஏன் இப்படி வெட்டி வெட்டிச் சாய்க் கிறது? என்று இடித்துரைக்கும் கதை. மதமான பேய் பிடித்த மனிதர்கள் சிலர்மானுடத்தை ஏன் இப்படிக்குரூரப் படுத்துகிறார்கள் என்று சாடுகிற கதை. மதமே பிரிவு; பின் அதற்குள்ளும் ஒரு பிரிவு ஏன் என்று கேட்கிற கதை.
'மதம்' என்னும் அடர்ந்து படர்ந்து நிற்கும் இந்த நச்சு மரத்தை சுலபமாய்ப் பிய்த்து எறிந்துவிட முடியுமா?, கனமான கோடரியால் பிளக்க முயன்றால் முடியும் என்று உணர்த்துகிறார் இன்குலாப்.
மதப் பிரச்சனையை வைத்து எழுதுவது கத்திமேல்நடப்பது போன்றது. இதில் கதாசிரியரின் வெற்றி இளம்வாசகரிடையே மனிதநேயத்தை மதம்-சாதி ஒழிந்த சமுதாய நல்லிணக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் திசை வழியைக் காட்டுவதில் தான் உள்ளது. அதை இன்குலாப் திறம்படவே செய்திருக்கிறார். அதுவும் மிகவும் சமன் செய்து சீர்தூக்கிய நோக்குடன் (Balanced View) 'மதம்' கதையைக் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். கதையிலே வருவது போன்ற கலவரங்கள் நிகழும்போது கண்ணுக்குத் தெரிவது 'மதம்' ஒன்று தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத 'சாதி' எனும் கிருமியை மைகிராஸ்கோப் மூலம் நமக்குக் காட்டுகிறார்.
முன்பெல்லாம் பெரியவர்கள்தான் பழமைவாதிகளாக, சாதிப் பாகுபாடு - மத வேறுபாடு பார்ப்பவர்களாகத் திகழ்ந்தார்கள். இப்பொழுது இளைஞர்களிலும் சிலர் அப்படி ஆக்கப்படுகிறார்கள். இதற்கென்றே சில தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். அந்தத் தலைவர்கள்
123