பக்கம்:முகவரிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோயில் செய்குவோம்” என்ற பாடலைக்கூடத் திரித்துக் கூறத் தயங்கமாட்டார்கள் என்பதையும் இன்குலாப் நேர்த்தியாகச் சித்திரிக்கிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக் காக இதுவரை எத்தனை கதைகள் வந்துவிட்டன. இது புதியதல்லதான். ஆனால் இந்தப் பிரச்சனையை கண்ணுக்குத் தெரியாத அதன் ஆணிவேரைக் கண்டு எழுதியுள்ளவர்இன்குலாப் மட்டுமே அப்படிப்பட்ட அந்த வேர்கள் எவை? எந்த மதவெறித் தாக்குதலும் யாரை நோக்கிப்பாய்கின்றன? கீழ்மைப்படுத்தப்பட்ட சாதியாரை யும் ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்களையும் நோக்கித்தான். எந்த மதத்திற்கு மாறினாலும் சமுதாயத்தில் அவன் மதிப்புநிலை அவன் சாதியைப் பொறுத்தும் அவனின் பொருளாதார நிலையைப் பொறுத்தும்தான்.

மட்டனேந்தல் கிராமத்தவர்க்கு ஒருபுறம் பாகைக்குளம் முஸ்லீம்கள் துபாய்ப் பணத்தில் கொழிக்க, தாங்கள் இன்னும் எடுபிடிகளாக வாழவேண்டியுள்ளதே என்ற ஆற்றாமை... அது பொறாமையாக உருவெடுக்கத் தூண்டி விடுகிற இயக்கங்கள் வேறு.

   "அவர்களுடைய உறவில் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும்
    இடையே தோன்றும் பகைமை உணர்வும் வளர்ந்து வந்தது."

அந்தப் பகையை கோபாலும் அவனுடைய இயக்கத் தலைவர் முரளிதரனும் நன்றாகப் பயன்படுத்திக் கொள் கிறார்கள்.

ஆனால் இல்லாதவன், இந்துவில் மட்டுமல்ல, இஸ்லாத்திலும் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். அந்த இல்லாதவன்தான் மதக்கலவரப் பொறி பறந்ததுமே தாக்கப்படுகிறான்.

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/127&oldid=969632" இலிருந்து மீள்விக்கப்பட்டது