திருத்துவோர்) வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள். இந்த மார்க்கத்திற்கு வந்த பின்னரும் அதைச்சொல்லி ஜமாத்தில் சண்டைக்கு வந்தான் சேவுரான் என்ற தங்கப்பல் பணக்காரன். "நாயகம், நாசுவன் வேறே மரைக்கா வேறே என்றா உனக்கு மார்க்கத்தைச் சொல்லித் தந்தார் என்று கேட்கக் கூடியவர்கள் குறைவாகத்தானே இருக்கிறார்கள்.
'இஸ்லாத்தின் சமத்துவம் ஒன்று தான் உலக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒரே தீர்வு என்று அவரும் நம்பினார்' அப்படி நம்பிய வைத்தியர் அமானுல்லாவையே முஸ்லீம் என்று பாராமல் நாசுவன் என்றல்லவா பார்த்தார்கள்.
மதத்தை வைத்து முன்னணி அமைப்பவர்கள் மதக் கோட்பாடுகளை முன்னணியில் நிறுத்துவதில்லை என்பதை இன்குலாப் கதைப் போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். கைலி கட்டியிருக்கும் இந்து இளைஞர்களைப் பார்த்து 'உங்கள் அடையாளத்தை இழந்துவிட்டீர்கள்' என்று முன்னணித் தலைவர் முரளிதரன் சொல்லும்போது அந்த மதத்திலே கைலி கட்டுவதை விட 'பாண்ட்" போடுபவர்கள் அதிகம் என்ற ஞாபகம் வந்தால் 'ஒ? நீங்கள் வேதத்தில் இறங்கிவிட்டீர்களே என்று கேட்பாரோ எனக் கேட்கத் தோன்றும். பரமு போன்றோர் புத்தியோடு இருக்கும்போது 'யூசுப் இந்து மதத்திற்கு வந்தால் எந்தச் சாதிலே சேர்த்துக்கிறது?’ என்று கேட்டதற்கு கோபாலால் நிறைவான பதில் தர முடியவில்லை.
தேவை என்று வருகிறபோது இந்து - முஸ்லீம் என்று பாகுபாடு வர முடியாது. எந்த முசுலீமை துலுக்கப் பயல் என வைதார்களோ, அந்த முஸ்லீம் மதத்தைச் சார்ந்த வைத்தியர் அமானுல்லாவிடம் பரமுவின் அக்காள் பச்சைக் கிளியை கொண்டு செல்ல நேர்ந்தபோது, நெற்றியடி போல, அவள் கேட்கிறாள்;
128