உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


     "யாரு வீட்ல போயி நிக்க வேண்டியிருக்கு, பாத்தீங்களா?'

என்று இப்படி வேறுபாடு பார்க்காத வைத்தியரின் குடும்பம் இந்தப் புயலால் சிக்கித் சீரழிகிறது.

இறுதிக் கலவரத்துக்கு ஒரு பொறியைக் கிளப்பிவிட்டான், பகர்தீன். அவன் ஊதிவிட்ட தீப்பொறி ஜெயிலானி ராக்கம்மாள் பேருந்துச் சண்டை. இருதரப்பும் மோதலில் இறங்கிப் பலர் சாதலில் முடிகிறது.

மனிதர்களை மட்டுமா, வெட்டி எறிந்தனர்? ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களையுமல்லவா வெட்டி எறிகின்றனர். யூசுப்பும் பச்சைக்கிளியும் இந்து முஸ்லீம் ஒற்றுமைவேருக்கு நீராகத் தங்கள் குருதியைப் பாய்ச்சுகின்றனர்.

    நெடுங்கால வறட்சியில் பிளந்து போய்க் கிடந்த உவர் மண்
    சிவந்து நனைந்தது.

இதற்காகவா அன்று

    'செம்புலப் பெயர் நீர் போல
     அன்புடைநெஞ்சம்
     தாம் கலந்தனவே'

என்று பாடினார்? செம்புலப் பெயர் நீர் அல்ல; செந்நீரே சிந்தினர் - ஒற்றுமைப் பயிர் வளர.

இன்னும் எத்தனை யூசுப்களையும் பச்சைக்கிளிகளையும் பாழும் சாதி மத வெறி பலி வாங்கப் போகிறதோ?

இந்தத் தொகுப்பின் கடைசிக் கதையான 'மதம்' மதக் கலவரத்தின் உண்மையான கோர முகத்தைக் காட்டும் வித்தியாசமான கதை.

129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/130&oldid=969637" இலிருந்து மீள்விக்கப்பட்டது