பக்கம்:முகவரிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரிசல் வட்டார எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அதிகம். தரவைக்காடும் மணல்வெளியும் பனை விடலியும் உடை மரமும் மட்டுமே எங்கு நோக்கினும் மைல்கணக்காகப் பரந்து கிடக்கும் மண்டபம் கீழக்கரை தங்கச்சிமடம் போன்ற ஊர்களின் மண்மணக்கும் இராமநாதபுர வட்டார எழுத்தாளர்கள் அபூர்வம். கந்தர்வனின் சாசனத்தைத் தொடர்ந்து வெளிவரும் இன்குலாபின் இந்தப் பாலையில் ஒரு சுனையில் இராமநாதபுர மண்ணின் மணம், கடற்கரை யின் ஈரப்பசை, கீழக்கரை மக்களின் அரபுத் தமிழ் எல்லாம் இயல்பாய் வெளிப்படுகின்றன.

“லக்கு (இடம்) சம்சயம் (சந்தேகம்) கடையார் (மீனவர்) தொடுப்பு (கள்ளத் தொடர்பு) பெண்கடல் (அலை குறைந்த கடல்) ஆண்கடல் (ஆர்ப்பரிக்கும் கடல்) புளுக்கை (கீழ்பட்டவர்) கடையப் பெட்டி ( கூடை) என்றெல்லாம் பாத்திரங்கள் வார்த்தைகளை விதிக்கும்போது, மூதேவி, பாதகத்தி, கழிச்சலிலே போவா' என்று வசைப் பாடும்போது சரியான இராமநாதபுரத்துக்காரர் என்று இன்குலாபை அடையாளம் கண்டு கொள்கிறோம். (நானும் இராமநாதபுரத்துக்காரன்ததான்... ஆனால் சரியான அல்ல...)

"கொக்குக நெறங்கூட மாறிப் போயிடுச்சு. நல்ல மழைக் காலத்துலே ஒடைமரத்துலேருந்து றெக்கையை விரிச்சா சலவைக்குப் போட்டு எடுத்த சால்வையை விரிச்சமாதிரி அப்படி வெள்ளையால இருக்கும். இப்போ றெக்கைக்கு மேலே மட்டுமில்லே அடியிலேயும்கூட சாம்பல் நெறமா மங்கிப் போயிடுச்சு, இன்னும் கொஞ்சநாளு மழை தண்ணி இல்லேன்னா இந்தக் கொக்கெல்லாம் நெறம் மங்கிக் கருப்பாய் போனாலும் போயிடும்' என்று ஆக்ரா எண்ணெய் சுத்திகரிப்பாலைப் புகையால் நிறம் மங்கி வரும்

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/131&oldid=969638" இலிருந்து மீள்விக்கப்பட்டது