பக்கம்:முகவரிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



   'சிற்பி பேசுகிறேன்'
    என்ற குரல் கேட்கிறேன்
   ‘எப்படி இருக்கிறீர்கள் என்கிறார்
   'ஏதோ இருக்கிறேன் என்கிறேன்....

   'மகாகவி பாரதி
    கடலூர்ச் சிறையில்
    இருந்த இருபத்தைந்து நாட்களில்
    அவர்
    எண்ண ஓட்டம்
    என்னவாய் இருந்திருக்கும்
    என்பதை எண்ணி
    எழுதியிருக்கிறேன்
    ஒரு நெடுங்கவிதை....
    அது இன்று வரும்
    அகரத்துக்கு"
    படித்துப் பாருங்கள்
    முடிந்தால்
    ஒரு சில பக்கங்கள்
    எழுதுங்கள்
    உங்கள் கருத்தை
    என்கிறார்.... நான்
    ஒப்புக் கொள்கிறேன்.

    கொஞ்ச நேரத்தில்
    கூரியரில்
    வருகிறது அந்த நெடுங்கவிதை

    உறையைப் பிரித்து
    உள்ளேயிருந்த
    கவிதையின்

134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/135&oldid=970633" இலிருந்து மீள்விக்கப்பட்டது