பக்கம்:முகவரிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'வில் இருக்கிறது
வீக்கிட நாண் இருக்கிறது
குறிபார்க்க அம்பு இருக்கிறது
எடுக்கவும் தொடுக்கவும்
வழிதான் இல்லை....
தான் எழுதிவைத்த
நூல்களை
அச்சிட்டு வெளியிட
ஆள்தான் இல்லை
என்று
கூறி நெஞ்சம் குமுறுவது....

'திலகருக்கு மறுப்பல்ல காந்தி
தியாகத்தின் தொடர்ச்சி
சந்தனத்தின் மேல் வைத்த
குங்குமம்' என்று
தீவிரவாதியாய்த்
திகழ்ந்து பின்
காந்தி தாசனாய் உயர்ந்தது

'புதிய காலத்தின் குரலாக
உதய காலை ரேகையாய்'
இன்னொரு ஆத்திசூடி
இயற்றித் தந்தது....

தன்னைப் போலவே பாடும்
தாசனின் முதல் பாடலைக்
கேட்டுக் கிறுகிறுத்து
'எழுக நீ புலவன்’
என்று புகழ்ந்தது....

'என்னுடைய மகள்
தாழ்த்தப்பட்ட இளைஞருடன்

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/140&oldid=970629" இலிருந்து மீள்விக்கப்பட்டது