இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடல் கடந்த நாட்டுக்கு
ஓடிப்போய் அங்கிருந்து
அப்பா நான் சவுக்கியம்
என்று எழுதும் கடிதம்
எத்தனை பேரின்பம்’
என்று நெருங்கிய
தோழர்களிடம்
துணிச்சலாய் உரைத்தது
'இழிந்த சாதியில்
பிறந்த ஒருவன்
எல்லா வேதமும்
ஞானமும் பெற்றாலும்
சிருங்கேரி மடத்தின்
தலைவராக முடியுமா?"
இந்த வினாவை
பெரியாருக்கு முன்பே
'இந்து'வில் எழுப்பியது
தன் அன்புச் சீடன்
கனகலிங்கத்துக்கு
பூணுால் அணிவித்து
புதிய பிராமணரை
உதிக்கச் செய்தது....
மகாத்மா காந்தியும்
விவேகானந்தரும்
மதிப்புக்குரியவர்கள்
என்றாலும் அவர்கள்
விதவைத் திருமணம்
வேண்டாம் என்று
140