உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தக் கவிதையால்
தமிழுக்கும் ஒரு 'புரட்சி' என்னும்
சொல்லாட்சியைத்
தந்தேன்' என்று
பெருமிதத்துடன் பேசியது

'கனக்கும் செல்வம்
நூறு வயது
இவையும் தர நீ
கடவாயே'
என்று
மணக்குள விநாயகரிடம்
இணக்கமாய்க் கேட்டது

சிறையிலிருந்து
விடுதலை பெற்று
வெளியே வந்து
சுதந்திரக் காற்றை
சுவாசித்து நின்று
'உயிர் நன்று
சாதல் இனிது'
என்று
'காட்சி' கவிதையில்
எழுதிய
கடைசி வரியை நினைத்துப் பார்த்தது....

இப்படி எத்தனை நினைவுகள்
எத்தனை எத்தனை நிகழ்வுகள்

நான் தொட்டுக் கொடுத்த
கொஞ்சம்,
விட்டு விட்டது நூறையும் விஞ்சும்.

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/143&oldid=970626" இலிருந்து மீள்விக்கப்பட்டது