பக்கம்:முகவரிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படபடத்து
விழிக்கூட்டுக்குத் திரும்புகிறது."

இதேபோல் பின்னால் ஆடுவதும் சிறகு பரப்புவதும் குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதுமான பறவை இயல்புகள் உறக்கத்தோடு பொருத்திச் சொல்லப்பட்டுள்ளன. இந்தப் படிம அழகை ஏந்திவரும் உறக்கம் நம் அடிமனத்தை விழிக்க வைத்துவிடுகிறது. அபி நீலாம்பரி என்று பெயரிட்டிருந்தாலுங்கூட இக்கவிதை நம் உணர்வுகளுக்குப் பூபாளமாக அமைந்துவிடுகிறது.

ஜாடியில் உள்ள பூவைப்போல் அல்லாமல் கொடியில் உள்ள பூவைப்போல் அபியின் கவிதைகளில் படிமம் இயற்கையாய் இருக்கிறது. யார் வருவீர், ராப்பிச்சைக்காரன் போன்ற கவிதைகள் இதற்குச் சான்றுகள். மன்மதன், தேவன், காமன் என்றெல்லாம் வழிவழியாக வருணிக்கப்பட்டதை மாற்றி ராப்பிச்சைக்காரனாக்கியிருப்பது துணிச்சல்தான்.

"தங்கள் ஆன்மாக்களின் பசியை
அலட்சியம் செய்துவிட்டு
உனக்குப் படைக்கிறார்கள்"

என்று காமத்தைப் போ, போ என விரட்டும் கவிஞர்

"உனக்குத் தர்மமிடாவிடில்
உலகம் தழைப்பதேது?"

என்று எதார்த்தவாதிகள் பரிவோடு சொல்வதையும் குறிப்பிடுகிறார். காமத்தின் 'ஜெக்கில்’ ஆகிய காதலையும் "இதயத்தை ஒரு தூரிகையாகச் செய்து" அருமையாகத் தீட்டிக்காட்டுகிறார் அபி:

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/16&oldid=968469" இலிருந்து மீள்விக்கப்பட்டது