இன்று ரயில் ஏறி - அதுவும் மெயில் ஏறி வேகமாக உலகம் - சுற்றும் வசதி இருக்கிறது. இருந்தும் நம்மில் எத்தனை பேர் உலகம் சுற்றும் வாலிபர்களாகிறோம்?
உலகம் கிடக்கட்டும். சொந்த நாட்டையாவது-இல்லை, சொந்த ஊரையாவது ஒழுங்காகச் சுற்றிப் பார்க்கிறோமா?
அவ்வப்போது வகுப்புக்குத் தாமதமாக வரும் மாணவனை வாசலில் நிறுத்தி "என்னப்பா, ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிறாயா? " என்று ஆவலோடு கேட்டிருக்கிறேன். "ஆமாம், தெப்பக்குளம், காந்தி பூங்கா, பழைய அரண்மனை... எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்: என்று ஒரு மாணவனாவது பதில் சொல்ல வேண்டுமே! 'இல்லை ஐயா, தண்ணீர் வரவில்லை; குளிக்க நேரமாகிவிட்டது. விறகு எரியவில்லை. சமைக்க நேரமாகி விட்டது" என்று கூறினால் எனக்கு எப்படி இருக்கும்?
என் மாணவர்களில் சிலர் டாக்டர் ஆகலாம்; பொறியாளர் ஆகலாம்; துணைவேந்தர் ஆகலாம்; சினிமா டைரக்டர் ஆகலாம். அமைச்சராகவும் ஆகலாம். ஆனாலும் என்ன? என் இருபதாண்டு ஆசிரியப் பணியில் தன்னை ஓர் ஊர் சுற்றி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு மாணவனை - எதிர்காலத்தில் சுற்றுலா வாரியத் தலைவராகும் ஒரு மாணவனை என்னால் உருவாக்க முடியவில்லையே!
என் கவலையைப் போக்கும் விதத்தில் ஒரு மாதம் தம் இஸ்கஸ் நண்பர்களுடன் இந்தியச் சுற்றுப்பணயம் மேற்கொண்டிருக்கிறார் தோழர் நெல்லை. எஸ்.வேலாயுதம்.
சுற்றுப்பயணம் வெற்றுப் பயணம் அல்ல, ஒரு வெற்றிப் பயணம் என்று உறுதிப்படுத்தும் வகையில் தம் பயண
20