அனுபவங்களை மூன்று நோட்டுப் புத்தகங்களில் எழுதி என்னிடம் காட்டினார். "படித்துவிட்டு ஒரு முன்னுரை எழுதித்தாருங்கள்” என்றார்.
"என்ன தோழரே, நீங்கள் இந்தியா முழுவதும் பார்த்து விட்டு எழுதியிருக்கிறீர்கள்; நான் மட்டும் படித்துவிட்டு எழுதுவதா? நியாயமில்லை. குறைந்தபட்சம் டில்லிக்காவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள். அப்போதுதான் முன்னுரை எழுத முடியும்" என்றேன்.
தோழர் சளைத்தவரா என்ன, உடனே "இந்திய ஜி.டி.ஆர். நட்புறவு மாநாட்டுக்குப் போவோம்" என்று என்னையும் இன்னும் சில நண்பர்களையும் டில்லிக்கு இழுத்துச் சென்றுவிட்டார்.
அப்புறம்... முன்னுரை எழுத வேண்டியது தானே? (எச்சரிக்கை, முன்னுரையில் இடையிடையில் என் அனுபவமும் வரும்)
தோழரைப் பற்றி ஒரு சுவையான தகவல்...
சட்டமன்றத் தேர்தல் நேரம். ஒரு முற்போக்கு அரசியல் கட்சியைச் சார்ந்த ஓர் அம்மையார் மதுரையில் பல இடங்களில் பேசுகிறார். அவர் ஆங்கிலப் பேச்சைத் தமிழாக்கம் செய்யத் தோழர் வேலாயுதம் அருகில் நிற்கிறார்.
ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களின் அத்துமீறல்கள் பற்றி அந்த அம்மையார் வருணிக்கிறார். காவல் நிலையத்தில் ஒரு பெண் கணவன் முன்னிலையில் மானபங்கப்படுத்தப்
21