பக்கம்:முகவரிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்ட கொடுமையை விவரித்து "கற்புக்கரசியர் பிறந்த நாட்டிலா இந்த இழிநிலை" என்று கேட்கிறார்.

மொழிபெயர்க்க வந்த தோழர், "காலனோடு போராடிக் கணவன் உயிரை மீட்ட கற்புக்கரசி சாவித்திரி பிறந்த நாட்டிலா இந்த இழிநிலை? காவலனோடு வழக்காடி கணவனுக்காக நியாயம் கேட்ட கற்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டிலா இந்த இழிநிலை?" என்று 'கற்புக்கரசியர்' பெயர்களை அடுக்கி உணர்ச்சியைத் தூண்டுகிறார்.

மொழிபெயர்ப்பு வெற்றிகரமாக அமைவது கூட்டத்தினரின் முகத்தில் தெரிகிறது. அம்மையாருக்கும் புரிகிறது. அடுத்துப் பேசிய கூட்டங்களில் அம்மையாரே வெறுமனே "கற்புக்கரசியர் பிறந்த நாட்டிலா இந்த இழிநிலை", என்று கேட்காமல் 'காலனோடு போராடி... காவலனோடு போராடி...." என்று ஆங்கிலத்தில் ஆவேசத்தோடு கேட்க ஆரம்பிக்கிறார்.

மொழிபெயர்க்கப்போய் பேச வந்த அம்மையாரையே மொழிபெயர்க்க வைத்த பெருமை தோழருக்குரியது.



தோழர் வேலாயுதம் ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு இடதுசாரி சிந்தனையாளர், ஒரு முற்போக்கு எழுத்தாளர் என்பது முன்னமே எனக்குத் தெரிந்த விவரம். 'ஒரு சிறந்த ஊர்சுற்றி' என்பது இப்போது இந்த நூல் மூலம் தெரியும் புதிய செய்தி.

ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் முப்பது நாட்களையும் முழுதும் பயனுள்ள வகையில் செலவு செய்துள்ளார் தோழர். அங்கங்கே கண்ணில் நிறுத்தித்தாம்

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/23&oldid=970620" இலிருந்து மீள்விக்கப்பட்டது