'இந்த இரண்டு படங்களுக்கிடையில் ஆறு வித்தியாசங்கள் உள்ளன' என்று வாசகர்களின் கண்டுபிடிப்புத் திறனுக்கு ஒரு வாரப்பத்திரிகை ஊக்கமளிக்கிறது.
வடக்கு-தெற்கு என்று பேசப்படும் இந்தப் பெரிய தேசத்தில் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் இருந்தாலும். அவற்றைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமான காரியமல்ல என்றாலும்-அடிப்படையில் வலிமைமிக்க ஓர் ஒற்றுமை உணர்வு ஊடுருவி நிற்கவே செய்கிறது.
நம்முடைய அரசியல்வாதிகளைக் காட்டிலும் நம் இதிகாசங்களும் காவியங்களும் கோட்டைகளும் கோயில்களும் அந்த ஒற்றுமைக்கு அதிகம் உதவி வருகின்றன.
இராமன், இலட்சுமணன், சீதை, கிருஷ்ணன், லட்சுமி, பார்வதி இப்படி இந்த தேசமெங்கும் கோவில்கள், சிலைகள்.
தோழர் நிறைய கோவில்களைப் பார்த்திருக்கிறார். ஹரித்துவாரத்தில் ஒரு கோவில். ஒரு இராமர் சிலையில் ஆயிரம் இராமர்கள் தோன்றும் வண்ணம் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள நேர்த்தியைக் கண்டு தோழர் மெய் மறக்கிறார்.
"நாத்திகனுக்குக் கூட கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்துமளவுக்குக் கட்டப்பட்டுள்ள அற்புதக் கண்ணாடி மாளிகை. அதிசயம்! ஆனந்தம்!"
என்று பரவசப்படுகிறார். தோழர் எங்களையெல்லாம் விட்டுவிட்டுக் கட்சி மாறிவிடுவாரோ-பக்த ராமதாஸ் ஆகிவிடுவாரோ என்று பயப்படுகிறேன்.
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
24