உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் ஜி.யு.போப் தம் கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னாராமே.’... இனி இந்தியாவில் எண்ணற்ற சகோதரர்கள் தங்கள் கல்லறை களில் ஒரு சோவியத் நண்பன்' என்று எழுதச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொருவர் இதயத்தையும் சோவியத் ஆதர்சம் ஆட்கொண்டு வருகிறது. வாழ்க! தம்முடன் வந்த இஸ்கஸ் நண்பர்களுடன் தோழர் வேலாயுதம் டில்லியில் - சோவியத் கலாச்சாரமாளிகையில் 'ருஷ்யாவில் சுற்றுலா என்ற திரைப்படம் பார்த்ததைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

”இந்தப் படத்தைப் பார்த்து முடிந்ததும் ருஷ்ய நாட்டுக்குச் சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சோவியத் யூனியனுக்குச் சென்று இல்லாமையையும் கல்லாமையையும் ஒழித்த அந்தப் புனித பூமியை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது.”

தோழரின் ஆவல் அதிவிரைவில் நிறைவேற வேண்டும். அடுத்து ஒரு சோவியத் நண்பனின் சோவியத் சுற்றுலா என்ற நூல் வெளிவர வேண்டும். அதற்கும் நான்தான் முன்னுரை எழுதவேண்டும். அதாவது....

தோழருக்கு என் நோக்கம் புரிந்தால் சரி.

15.7.1980

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/29&oldid=968483" இலிருந்து மீள்விக்கப்பட்டது