பக்கம்:முகவரிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலில் கம்யூனிஸ்மா என்று இதை எதிர்ப்பவர்கள் எதிரெதிர் வரிசையில் இருக்கிறார்கள்.

காதலுக்கும் கம்யூனிஸ்த்துக்கும் மோதலோ முரண்பாடோ இல்லை என்பதை இரண்டையும் உண்மையாக நேசிப்பவர்கள் உணர்வார்கள்.

'ஜென்னியின் கணவா' என்று தாங்கள் ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருப்பதே காதல் உணர்வையும் சமூக உணர்வையும் ஒன்றாய் இணைக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தைக் காட்டுகிறது. அந்த ஜென்னிரின் கணவனைப் போலவே - மார்க்ஸைப் போலவே நீங்களும் ஒரு தீவிரமான காதலர்தான்.

உங்கள் துணைவியின் பிரிவுக்குப் பிறகு, உங்கள் காதல் சமுதாயக் காதலாகப் பரிணமிப்பதைக் கண்டு மகிழ்கிறேன். நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்த காலமோ மாதக்கணக்கில்; நீங்கள் வாழவேண்டிய காலமோ வருடக்கணக்கில்.

'இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற பிறகு இனியும் நீங்கள் உங்களை எதிர்த்துக்கொள்ள வேண்டாமல்லவா? ஒரு வேண்டுகோள்...... .

'ஒரு வேண்டுகோள்' என்று நீங்கள் எழுதிய கவிதையி லிருந்துதான்......

உங்கள் அக்கினிக்கு
மார்க்ஸ் மார்க் நெய்யை
ஊற்றுங்கள்.
22.3.1977

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/34&oldid=968490" இலிருந்து மீள்விக்கப்பட்டது