பக்கம்:முகவரிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய சகாப்தம், புதிய மனிதன், புதிய வாழ்க்கை நெறி இவையே அவர்களின் கலை இலக்கிய நோக்கங்கள்.

சோஷலிசம், சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் இவையே அவர்கள் ஆன்மாவை வசீகரித்த உன்னதத் தத்துவங்கள். மனித நேயத்திலும் புரட்சியிலும் வேர்கொண்ட சோவியத் இலக்கியத்தை சர்வதேசத் தகுதிக்குரியதாக்கியவர்கள் கார்க்கி, ஷோலகோவ், எரன்பர்க், மாயகோவ்ஸ்கி எவ்துஷெங்கோ... இன்னும்... இன்னும்... இவர்கள் அக்டோபர் புரட்சியின் அருமைப் புதல்வர்கள். இவர்கள் வானத்தில் இருந்து வந்த தேவர்கள் அல்லர். மண்ணின் மனிதர்கள்.

இவர்களுக்குப் புதிய உலகத்தைத் தரிசிக்கத் தயாராக சாளரத்தைத் திறந்து வைத்தவர்கள் புரட்சிக்கு முன்பு வாழ்ந்த ஒப்பற்ற மேதைகள்... புஷ்கின், கோகோல், டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செகோவ், ஷெட்ரின் போன்ற எழுத்துச் சிற்பிகள்...

ஷெட்ரின் (1826-1889) புரட்சிக்கு முந்திய ருசியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். மிக்கெய்ல் சால்டிகோவ் என்ற இயற்பெயருடைய ஷெட்ரின் ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர்; பண்ணை அடிமைகளின் பராமரிப்பில் வளர்ந்தவர்.

இளமையிலிருந்தே நிலப்பிரபுக்களின் நீசத்தனத்தையும் கோணல் குணத்தையும் நேருக்கு நேர் கண்டுகொள்ளும் வாய்ப்பிருந்ததால், ஷெட்ரின் தம் எழுத்துக்களில்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/36&oldid=968492" இலிருந்து மீள்விக்கப்பட்டது