போர்பிரி எதிர்மறைக் குணங்களின் இருப்பிடமான ஷைலக்கின் வார்ப்பாகவே தென்படுகிறான்.
ஷெட்ரின் போர்பிரியின் விகாரமான ஒவியத்தை அனுபவித்து, அழகாகத் தீட்டியிருக்கிறார்.
மரணப்படுக்கையில் கிடக்கும் தம்பியின் தங்கப் பொத்தான்களைத் தேடும் அளவுக்குக் கூர்மையானவை அவன் கண்கள்......
பிள்ளைகள் பேசினாலும் ஒட்டுக் கேட்கும் பெருமைக்குரியவை அவன் காதுகள்... ...
வயதான தாய்க்கு ஒரு கோச் வண்டியைக்கூட விட்டுக் கொடுக்க விருப்பமில்லாத பெரிய உள்ளம் அவன் உள்ளம். எனினும் அவனைப்போல் வேறு யாராலும் தாய்ப்பாசத்தைத் தம்பட்டம் அடித்துக் காட்ட முடியாது... . . .
- "நீதான் தாய்க்கோழி. நாங்கள் கோழிக்குஞ்சுகள், க்ளக்-க்ளக்-க்ளக் என்று சத்தம் போடுவோம்...... "
போர்பிரி யாருக்கும் ஒருவேளைச் சாப்பாடு போடுகிறானோ இல்லையோ, எப்போதும் சத்தம்போட மட்டும் தயங்கமாட்டான்.
கோதுமை கடனாகக் கேட்டு வரும் ஒரு ஏழைக் குடியானவனைத் தன் கொத்தடிமையாக வைத்துக்கொள்ள அந்த வெறும் சத்தத்தையே அள்ளி வீசுகிறான்......
"முதலில் கடவுளுக்குப் பயப்படனும். அப்புறம் நமக்கு மேலே இருப்பவர்களை, சார் சக்கரவர்த்தியால் நியமிக்கப்பட்ட நிலச்சுவான்தாரர்களை மதிக்கணும்..."
39