பாட்டாளி வர்க்கத்தையே எப்படி நேசிக்கிறாள்? வீட்டுக்குள் அடங்கியிருந்த அவள் அன்புள்ளம் தேசத்தை நோக்கி எப்படி விரிந்து பாய்கிறது?
ஷெட்ரினின் தாய் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தின் சீரழிந்த சித்திரம். கார்க்கியின் தாய் பாட்டாளி வர்க்கத்தின் உன்னதப் படப்பிடிப்பு.
ஒரு வகையில் ஷெட்ரினின் மோசமான தாய்தான் கார்க்கியின் முன்னுதாரணமான தாய் தோன்றக் காரணமோ?
முதற் பதிப்பில் 'ஜூடாஸ்' என்றும் மறுபதிப்பில் 'கொலோவோ குடும்பம்' என்றும் ருசிய மூலத்தில் வெளியிடப்பெற்ற இந்த நாவல் இப்போது தமிழில் 'ஒரு குடும்பத்தின் கதை' ஆகியிருக்கிறது.
கதையின் தலைப்பைப் போலவே தமிழாக்கமும் உயிர்த் துடிப்போடு அமைந்துள்ளது.
பேராசிரியர் தர்மராஜன் கார்க்கியின் இத்தாலியக் கதைகள் தென்ஆப்பிரிக்கக் கதைகள் போன்ற அற்புத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.
பள்ளிப் பருவத்திலிருந்தே சித்தாந்தப் பிடிப்பும் உலகளாவிய பார்வையும் சிறுமை கண்டு சீறும் உள்ளமும் போராடும் துணிவும் கொண்டவர்.
வகுப்பறைக்குள்ளே குறுக்கிக் கொள்ளாமல் சமூக வாழ்விலும் வளத்திலும் தன்னை ஒப்படைத்தவர். இந்த
41