இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல்பான குணம்தான் இவரைத் தமிழ்நாட்டின் உயர்கல்வி மட்டத்தில் இன்று வீறுகொண்டுள்ள ஆசிரியர் இயக்கத்துக்குத் தலைவராக்கியிருக்கிறது. ஆசிரியர்களைப் பண்ணை அடிமைகளாய் நினைத்த ஒரு தனியார் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வைத்திருக்கிறது. அரசு அக்கல்லூரியை ஏற்கவைத்த மாபெரும் சரித்திரச் சாதனைக்குரிய நாயகனாக்கியிருக்கிறது.
ஓ.... இவரே ஒரு நாவலுக்குரிய நாயகர்தான்.
ஷெட்ரின், கார்க்கி, ஷோலகோவ்... என்று மற்றவர்களின் கதையை இவர் எழுதட்டும்.
நான்....
இவர் கதையை எழுதுகிறேன்.
ஜனவரி ,1977
42