இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தனக்கு ஏற்பட்ட தோல்வியில் இந்த உலகத்தையே தலைகீழாகப் பார்ப்பது ஒரு விநோதம் அல்லவா ஒரு வேடிக்கை அல்லவா...!
அகலிகைக்கல் ஏதோ ஒரு காலடி பட்டதும் சிலிர்த்துப் போய் நீதானே இராமன் என்று கேட்க, 'இல்லை இராவணன்' என்று பதில் வருகிறதாம்.
போர்க்களத்தில் சித்தம் தடுமாறிய அருச்சுனனுக்கு 'பரவாயில்லை சரணாகதி அடைந்துவிடு' என்று கண்ணன் கீதோபதேசம் செய்கிறானாம்.
கோவலனுக்குக் கடிதம் கொண்டுபோய் ஏமாற்றத்தோடு திரும்பும் கோசிகனையே மாதவி கோவலனாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறாளாம்.
தனக்கு ஏற்பட்ட தோல்வியில் இந்த உலகத்தையே இப்படிக் கேவலமாகப் பார்ப்பது ஒரு குரூரம் அல்லவா? ஒரு கொடுரம் அல்லவா?
மன உளைச்சலின் உச்சியில் நின்று என்னைக் கொன்றுவிடுங்கள் என்று கதறுகிறார் கவிஞர். காரணம் கேட்டால் 'நான் கொல்வதற்கு ஒருவரும் இல்லை, பிறகு நான் எதற்கு இருக்க வேண்டும் என்கிறார்.
- 'நான் சுடுவதற்கு
- யாருமே உயிரோடு இல்லை.
- அத்தனை பேர்களும் ஏற்கெனவே
- செத்துப் போனவர்கள்
- யாருமே உயிரோடு இல்லை
- கிழடாகிச் செத்துப்போன
- சவங்கள் மத்தியில் நான்
46