இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- வாழ ஆசைப்படவில்லை
- என்னைக் கொன்று விடுங்கள்'
என்கிறார்.
தோல்வி, நம்பிக்கை வறட்சி, ஆத்திரம், மிரட்சி, பிரமை, வெறுமை, தற்கொலைத்தாகம், அந்நியப்பட்டு நிற்கும் அவலம் - இவை ஏறத்தாழ எல்லாக் கவிதைகளிலும் குடி கொண்டுள்ளன.
இந்தக் கவிதைகளை ஆழமாக விமர்சிக்கலாம்; அது புண்பட்ட உள்ளத்தை மேலும் புண்படுத்துவதாகாதா?
ஒரு நோயாளியின் நெற்றியை ஆதரவுடன் வருடும் ஒரு தாதியைப் போல் ஒர் ஆதரவற்ற குழந்தையை அன்புடன் தூக்கும் ஒரு தாயைப்போல் இந்தக் கவிதைகளை வரவேற்போம்.
- 'நிஜங்கள் எனக்குப்
- பயங்களாகின்றன'.
என்கிறார் கவிஞர்.
- 'தூங்கிக் கொண்டிருக்கவே என்னை
- அனுமதியுங்கள்'
என்கிறார்.
கவிஞருக்கு ஒரு பதில்... நான் அப்படி அனுமதிக்க மாட்டேன்.
எழுக கவிஞரே, எழுக!
口
டிசம்பர், 1982
47