பக்கம்:முகவரிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாயில்களை வைத்தே ஒரு
வசந்த மண்டபம்


நான் முதல்முறையாக தாஜ்மகாலைப் பார்க்கச் சென்ற போது தாஜ்மகால் நம் பார்வையில் பட்டுவிடாதபடி ஒரு பெரிய நுழைவாயில் கட்டப்பட்டிருப்பது கண்டு வெறுப்படைந்தேன்: ‘'இடையில் இது ஏன் குறுக்கே?' வாயிலின் உள் நுழைந்து போனவுடன் திடீரென்று நீலவானில் ஒரு வெள்ளைக் கனவாய் மலைபோல் எழுந்து நின்ற தாஜ்மகாலின் காட்சி என்னை பிரமிக்க வைத்தது.

தொலைவிலிருந்தே தாஜ்மகாலைப் பார்த்துக்கொண்டு போயிருந்தால் இந்த பிரமிப்பு எனக்கு சாத்தியப் பட்டிருக்காது. நுழைவாயில் தேவைதான் என்று எனக்கு நானே முணுமுணுத்துக்கொண்டேன்.

தாஜ்மகாலுக்கு இது சரிதான். ஆனால் இன்று எருக்கஞ் செடிகள் மண்டிப்போய், மேடாகிப்போன சிவகங்கை அரண்மனைக்கு ஒரு நுழைவாயில் தேவைதானா? தேவைதான். பாசி படிந்து போனாலும், இன்றும் நிமிர்ந்து நிற்கும் நெடிதுயர்ந்த அந்த வாயிலைப் பார்க்கிற போது தான், ஒரு காலத்தில் கொடி கட்டி அரசோச்சிய வீரர்களின் வாழ்க்கை நம் கண்முன் விரிகிறது. வாயிலின் தேவை புரிகிறது.

முன்னுரை என்பது ஒரு நூலுக்கு மிகவும் தேவை என்று எண்ணியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதனால்தான்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/5&oldid=969254" இலிருந்து மீள்விக்கப்பட்டது