உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சர்வதேசியம் நம் இலட்சிய எல்லை.

தேசியம் அந்த எல்லைக்கு வழிகாட்டும் கம்பம்; வழி அடைக்கும் கல் அல்ல.

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் அந்த வழிகாட்டும் கம்பத்தையே வெட்டி வீழ்த்தி வழி மறிக்க அவ்வப்போது முயன்று பார்க்கின்றன. வேண்டுமென்றே வெறியேற்றிச் சின்னச்சின்ன தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

சில சமயங்களில் அந்த வெறிக்கு அறிவாற்றல் படைத்த கவிஞர்களும் இலக்கிய மேதைகளும் கூடப் பலியாகிப் போகிறார்கள்.

இங்கே பலியானவர்களைப் பற்றிய பட்டியலை வாசிப்பதைக் காட்டிலும் வெற்றி பெற்றவர்களின் வீரப் பெயர்களை நினைத்துப் பார்ப்பதே மேல்.

தேசிய கவியான பாரதி சர்வதேசியவாதியாகவும் ஓங்கி உயர்ந்து நின்றதை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் நிமிர்கிறது.

இந்திய விடுதலையை எவ்வளவு வேகத்தோடு பாடி னானோ அந்த வேகத்திற்குச் சற்றும் குறையாமல் ருசியப் புரட்சியையும் பாரதியால் பாட முடிந்ததற்குக் காரணம்

'சீனமும் அரேபியாவும் எங்கள் தேசமே
இந்துஸ்தானமும் எங்கள் தேசமே
உலகெல்லாம் எங்கள் தேசமே'

என்று மகாகவி இக்பாலால் இசைக்க முடிந்ததற்குக் காரணம்

காரணம் அவர்களது சர்வதேசியக் கண்ணோட்டம்தான்; நாட்டம்தான்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/50&oldid=968510" இலிருந்து மீள்விக்கப்பட்டது