:'யாதும்ஊரே யாவரும் கேளிர்'
- 'பெரிதே உலகம் பேணுநர் பலரே'
என்ற பழந்தமிழ்க் கவிதைகள் உட்பட பல நாட்டுக் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சர்வதேசியம் கருக்கொண்டிருந்தாலும் மார்க்ஸின் வருகைக்குப் பிறகே அது ஒரு கோட்பாடாக - விஞ்ஞானக் கோட்பாடாக உருக்கொண்டது.
மார்க்ஸ் தான் சர்வதேசியத்தைச் சமூகப் பொருளாதாரப் பின்னணியில் வைத்துப் பார்த்தார். அதன் பயன்தான் 'உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்' என்ற கீதம்.
இந்தச் சர்வதேசிய கீதம் இன்று எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்கிறது. .
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலம்தான் சர்வதேசிய இலட்சியத்தை எட்ட முடியும் என்று மார்க்ஸீம் லெனினும் நம்பினார்கள்.
அந்த தேசத்தில் புரட்சி வெடித்தாலும் அதை உலகப் புரட்சியின் ஓர் அங்கமாகவே காணவேண்டும் என்னும் முற்போக்கான சிந்தனை இருந்ததால்தான் ருசியப் புரட்சியை உலகப்புரட்சியின் ஓர் அங்கமாகவே எண்ணினார் ஸ்டாலின்.
க்யூபா போன்ற சின்னஞ்சிறு நாடுகள் வியட்நாம், அங்கோலா போன்ற வீரத்திரு நாடுகளுக்குப் படையுதவி புரிந்ததெல்லாம் இந்த மேலான எண்ணத்தின் அடிப்படையில்தான். இந்த எண்ணம் வேரூன்ற வேண்டுமானால் சோசலிஸ் நாடுகள் தங்களுக்கிடையே உள்ள பூசலையும் பிணக்கையும் விட்டொழிக்க வேண்டும்.
50