ஒவ்வொரு அம்மாவையும் நேசிப்பதில் இராமன் ஆகிறார்.
விமர்சிக்கும்போது பரதன் ஆகிறார்.
'அம்மா' அல்லது தேசம் என்பது வெறும் மண் அல்ல; மக்கள்.
தமிழ்நாடன், தவறான தடத்தில் செல்லும் அல்லது தவறாகத் தடம்புரண்டு செல்லும் ஆளும் வர்க்கத்தையும் அரசையும் நோக்கி எதிர்ப்புக்குரல் கொடுக்கிறாரேயொழிய, எந்த மக்களையும் எடுத்தெறிந்து பேசவில்லை.
தமிழ்நாடன் பார்வையில் பழுதில்லை.
'அம்மா அம்மாவில்' நம்மை ஆண்டவர்களைப் பற்றிய இரண்டு சித்திரங்கள்...
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யக் கனவு கண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்துக்குத்தான் ஒரு காலத்தில் எத்தனை பெருமைகள் அவையெல்லாம் இன்றைக்கு எங்கே போயின? என்ன ஆயின?
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் 'மகாகனத்'திற்கு மனித உருவம் தந்தால் அது வின்ஸ்டன் சர்ச்சில் மாதிரிதான் இருக்கும். இன்று அந்த மகாகனம் மறக்கப்பட்டுவிட்டது. ஒன்றுமில்லாமல் உதிர்ந்துவிட்டது.
- 'உன் பெருமை ச்ர்ச்சில்
- சுருட்டுச் சாம்பல் ஆனது.
என்கிறார் தமிழ்நாடன்.
52