பக்கம்:முகவரிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்வேறு மொழிகளின் சொற்களைத் தன்னகத்தே கொண்ட அந்த மொழிக்குச்சொற்பிறப்பியல் (Etymology) கண்டு சொல்லி, சொற்பொருள் மாற்றம் (Semantics) நிகழ்ந்தவற்றுக்குச் சரியான பொருள் சுட்டி ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கங்களும் மேற்கோள்களும் காட்டி அவ்வகராதியை அமைத்துக் கொடுத்தார்.

அதிலும் குறைகள் இல்லாமல் இல்லை. தம்முடைய சொந்த விருப்பு, வெறுப்புக்களை ஓரிரண்டு இடங்களில் அவர் காட்டாமல் இல்லை. அரசியல் என்பதற்கு அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்பார். அவருக்கு ஸ்காட்லாந்தியரைப் பிடிப்பதில்லை. அதனால் 'ஓட்ஸ் என்பது இங்கிலாந்தில் குதிரையும், ஸ்காட்லாந்தில் மக்களும் உணவாகக் கொள்ளுவது' என்பார். கோவர் என்பது ஒரு பிரபுவின் பெயர். அச்சொல்லுக்கு ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிச் செல்பவர் (Goover அடிக்கடி கட்சி மாறுகிறவர்) என்று கோலி செய்திருக்கிறார்.


தமிழில் இதுவரை ஏறத்தாழ 200 அகராதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஜான்சனைப் போலத் தனிமனித முயற்சியில் வெளிவந்தனவும் அடங்கும்.

வீரமாமுனிவர், பரபிரிசிரியசு, ராட்லர், வின்சுலோ, யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர், யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை, ந.சி.கந்தையா பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் போன்றோரது அகராதிகளும் அடங்கும். விரிவான முதல் அகராதியை உருவாக்கியவர் யாழ்ப்பாணத்துச் சந்திரசேகரபண்டிதர்.

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/57&oldid=978558" இலிருந்து மீள்விக்கப்பட்டது