பக்கம்:முகவரிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது 58,500 சொற்களைக் கொண்டது. ஆனால் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாய் அமைந்தது சதுரகராதியே. பெயரகராதி, பொருள் அகராதி, தொகையகராதி, தொடையகராதி ஆகிய நான்கும் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதனை இயற்றிய வீரமாமுனிவரே "வட்டார வழக்குத் தமிழ் அகராதி” ஒன்றைத் தனியே வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த வட்டார வழக்குச் சொல்லகராதியும் தனிமனித முயற்சியாகவே வெளிவருகிறது. அதாவது அரசாங்கம் நியமித்த எந்தக் குழுவோ பல்கலைக்கழகமோ இதைச் செய்யவில்லை. கி.ராஜநாராயணனும் அவரது நண்பர்கள் போத்தையா போன்றவர்களுமே இந்த அகராதியில் அடங்கியுள்ள சொற்களைத் திரட்டியவர்கள். அவற்றிற்கு அகராதி உருக்கொடுத்தவர் கி.ராஜநாராயணன்.

பெரும்புகழ் பெற்ற பின்னரும் கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தவர் வி.ச.காண்டேகர்; அதுபோலவே தகழி சிவசங்கரன்பிள்ளை கேரளத்தில் கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவர்களைப்போல் கிராமத்தில் வாழும் ராஜநாராயணனுக்கு நகரத்தின் ஆரவாரங்களில் நாட்டம் இல்லை; 'கிராமியம்' என்பதில்தான் ஆர்வம் அதிகம். அவரது எழுத்தோவியங்கள் எல்லாம் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன. வட்டார வழக்குச் சொல்லகராதியோ இதனை முற்றமுழுக்க மெய்ப்பிக்கிறது. இந்த அகராதியை ஒருமுறை படித்த பின்னர் நாமும் ஏன் 'சுத்தப்பட்டிக்காட்டானாக இருந்திருக்கக் கூடாது' என்று ஓர் ஆதங்கம் உண்டாகிறது.


எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களுக்கும் விவகார அறிவு (நடைமுறை அறிவு) அதிகம் என்பது இவ்வகராதி

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/58&oldid=968518" இலிருந்து மீள்விக்கப்பட்டது