உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை’ என்று சொல்லும் அளவுக்குப் போய் இருக்கிறார்கள்.

முன்னுரைகளைப் பற்றிப் பேசுகிறபோது ரசுல் கம்சுதோவ் எனும் சோவியத் நாட்டு அலார் மொழிக் கவிஞர் ஒர் உதாரணம் காட்டுகிறார்:

அவரது தாகெஸ்தான் நாட்டுக் குதிரை வீரர்கள், என்னதான் அவசர வேலையாக இருந்தாலும், தன் வீட்டு வாசலிலேயே குதிரைமீது தாவி ஏறுவது இல்லையாம். குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்தபடியே தன் வீட்டையும், வீதியையும், கிராமத்தையும் கடந்து செல்கிறவரை, நடந்தே போகிறார்கள். வீட்டில் எதையேனும் விட்டுவிட்டோமா, வழியில் என்னென்ன இடர்கள் வருமோ என்றெல்லாம் சிந்தித்தபடியே நடந்து சென்று, பின்னரே தங்கள் குதிரைமீது தாவி ஏறி, குதிரையின் குளம்படிப் புழுதியில் மறைந்து போவார்களாம். சிந்தனையோடு கூடிய இந்த நடை போன்றதுதான் ஒரு நூலைத் தொடங்கும் முன் இருக்கும் முன்னுரை என்று பேசுகிறார் ரசுல் கம்சுதோவ்.

ஆனால் இதே முன்னுரையின் பணி, ழீன் ழெனே எழுதிய பிரெஞ்சு புத்தகத்தைப் பொறுத்தமட்டிலும் வேறாக இருக்கிறது. சிறைத்தண்டனை பெற்ற ழீன் ழெனே எனும் குற்றவாளி, சிறையில் தன் கைக்கு எட்டிய பழுப்புக் காகிதப்பைகளின் மீது குற்றவாளிகளும், தன் இன போகிகளும், ஆண் விபசாரிகளும் நிறைந்த தன் உலகைப் பற்றி உண்மையோடு எழுதி வைத்தான். கீழ்த்தரமான குப்பை என்று பொதுமக்களால் தள்ளப்பட்டு விடக்கூடிய இந்த நூலுக்கு, பிரெஞ்சு தத்துவமேதை ழீன் பால் சார்த்தர் சுமார் 50 பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதினார். இந்த

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/6&oldid=969255" இலிருந்து மீள்விக்கப்பட்டது