பிள்ளை பிழைக்கும்” என்பதற்கு இவர் தந்திருக்கும் தெனாலிராமன் கதை சுவையானது.
இன்னும் பெண்களுக்குள் தனியாகப் பேசிக்கொள்ளும் சுவையான பேச்சுக்கள் எல்லாம் இவர் எழுத்தில் உருவம் பெற்றுள்ளன. ஆக, பொருட்சுவை தர வந்த அகராதியில் அகச்சுவையும் உண்டு.
"தனி" என்பதைத் "தனீ" என்று நீட்டும்போது உச்சரிப்பின் மூலம் தனித்தன்மையான பொருள் காண்பவர் கி.ரா. அவருடைய இந்த எழுத்துருப்பெற்ற பேச்சுத் தமிழ் அகராதியும் தனி அகராதிதான்.
"பெரிய" என்பதைப் "பெரிய்ய" என்று குறிப்பிட்டு அந்தச் சொல்லுக்குக் காட்சி ரூபம் தருபவர் கி.ரா. அவருடைய இந்த அகராதி பெரிய்ய சாதனைதான். பல்கலைக்கழகப் பட்டம் பெறாத ஜான்சனுக்கு ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது அவருடைய அகராதிக்காக; அரிய சாதனைக்காக....
தற்போது தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கி.ரா.வுக்கு எந்தப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளிப்பதில் முந்திக் கொள்கிறது என்று பார்ப்போம்.
டிசம்பர், 1982
62