உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதேபோல் இன்னொன்று:

'இந்த இரவு
விடியாமலேயே
நிரந்தர இரவாகி
விடக்கூடாதா?'

என்று கேட்கிறாள்காதலி. அவளை மேலும் கீழும் பார்த்து விட்டுக் காதலன் குறும்புத் தனமாகக் கூறுகிறான்;

'எனக்கும் அதே ஆசைதான்
ஆனால்
என் அன்புக் கண்ணே!
ஆயிரமாயிரம்
நெசவுக் கலைஞர்களை
வாடித் தவிக்க விட்டு
நாம் வேடிக்கை பார்க்கும் நிலை
பாவமன்றோ!'

அடேயப்பா எவ்வளவு கருணை நம் நெசவாளிகள் வசந்தரூபனுக்கு ஒரு பொன்னாடை போர்த்தலாம்!


சொல்வதைச் சுவையாகச் சொன்னால், லாவகமாகச் சொன்னால் கவிதை அங்கே கண்ணடிக்கும்.

கல்லூரி நாட்களில் அளவாய் இல்லாவிட்டாலும் அழகாய் ஆறு பெண்களைப் பெற்ற பெருமகன் ஒருவர் வீதியில் வரும்போதும் போகும்போதும் என்னோடு படித்த மாணவர்சிலர் தங்கச்சிலைதயாரிப்பவர்....' என்று கிசுகிசுப்பார்கள்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/67&oldid=968528" இலிருந்து மீள்விக்கப்பட்டது