பக்கம்:முகவரிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசந்தரூபனின் 'ஸ்வர்ண கன்னி' என் அந்த நாள் ஞாபகத்தைக் கிளறுகிறாள்.

காதலியின் பெற்றோர் கவனமாய் இருக்க வேண்டுமாம். காரணம் - தங்கக்கட்டுப்பாடு இருக்கும்போது இருபத்து நாலு காரட்டில் ஒரு பெண்ணை உருவாக்கி விட்டார்களாம். சட்டப்படி குற்றமல்லவா? பெண்ணைப் பெற்றவர்களுக்குப் பெரிய ஆபத்தாம்! எந்த நேரமும் கைது செய்யப்படுவார்களாம் 'So beauty is so fatal' storm சேக்ஸ்பியர் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதியது இங்கே பொருந்துகிறது. 'அழகு வரி', 'ரதியும் விதியும் இரண்டும் அழகுக்கு அழகு சேர்க்கும் சொற்சித்திரங்கள்.

இடைக்காலப் புலவர்களுக்குச் சிலேடைகள் கரும் பென்றால் இந்தக் காலத்து வசந்தரூபனுக்கு சேட்டைகள் கற்கண்டு. கண்தானம் நல்லதுதானே செத்த பிறகு மண்ணுக்குள் மக்கிப்போகும் கண்ணுக்கு மறுபடியும் வாழ்வு கிடைக்கிறதே! குருடன் ஒருவனுக்குப் பார்வை கிடைக்கிறதே!

இவரோ - அந்தத் தானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்: காரணம்? தன் காதலியைப் பார்த்துக் களித்த கண்களைத் தானம் கொடுத்தால் அவை யாருக்காவது பொருத்தப் படுமாம். பிறகு யாரையாவது பார்த்துவிடுமாம்!

"என் கணகளின் நரம்பு
கறைபடுமன்றோ!'

என்று கவலைப்படுகிறார் இந்தக் கற்புக்கரசர்!

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/68&oldid=968529" இலிருந்து மீள்விக்கப்பட்டது