பக்கம்:முகவரிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரையினாலேயே. அழுக்கு மனிதன் என்று உதாசீனப்படுத்தப்படக்கூடிய ழீன் ழெனே, ‘புனிதத் தன்மையுடைய ழெனே’ என்று உலகப் புகழ் பெற்றான். இங்கு முன்னுரையின் பணி வேறாகிறது.



ன்றைய தமிழ் எழுத்துலகில் ஒரு 'கிரியா ஊக்கியாக' சலியாது இயங்கி வரும் கவிஞர் மீரா பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நூல்களுக்குத் தான் கொடுத்த முன்னுரைகளை மட்டுமே தொகுத்து ஒரு நூலாக்கி இருக்கிறார். வாயில்களை மட்டுமே வைத்து ஒரு வசந்த மண்டபத்தை உருவாக்கியிருக்கிறார்.

முன்னுரையின் பணி நூலுக்கு நூல் மாறுபடுகிறது என்பதை நன்கு உணர்ந்தவர் என்பதனாலேயே அவரது முன்னுரைகள் தம் நடையில், செய்தியில், நையாண்டியில் கூட நூலுக்கு நூல் மாறுபடுகின்றன. அவை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்பதும் இதற்கொரு காரணமாகலாம்.

அகராதியானாலும், நாவல் ஆனாலும், ஒவ்வொரு நூலின் நுழைவாயிலிலும், சிரித்த முகத்துடன் தோன்றி, வாசகர்களுடன் நகைச்சுவையோடு உரையாடி, அவர்கள் தோள்மேல் கைபோட்டு நூலுக்குள் அழைத்துச் செல்கிறார்.

கவிதை வானில் மட்டுமே சிறகடித்துக் கொண்டிருந்த தோழர் மீராவை, உரைநடைச் சமவெளியில் இறக்கிய பெருமை இம்முன்னுரைகளைச் சாரும். நல்ல போக்குகளை எங்கே கண்டாலும், எவரிடத்தில் கண்டாலும்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/7&oldid=970843" இலிருந்து மீள்விக்கப்பட்டது