உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:'சாணை தீட்டிய கண்கள்'

'சர்ப்பப் பார்வை'

இப்படிச் சில சொல்லோவியங்களில் சொக்கி நிற்க வைக்கும் வசந்தரூபன்.

"நாட்டுக் கட்டை, சரியான சைஸ், ஒதுக்குவது..." போன்ற சுவர்க் கிறுக்கல்களைக் காட்டி ஏனோ சங்கடப்படுத்துகிறார்!

சரசம் அலாதியான இன்பம் பயப்பது என்று பாராட்டுகிறார். உண்மைதான். ஆனால் அது விரசம் ஆகக்கூடாது. விரசம் என்றாலும் அதில் ரசம் இருக்கிறதே என்கிறார்.

நமக்கு சரசத்தில் உள்ளரசமே போதும்!

ஒரு வாக்குமூலம்...

சாக்ரடீசுக்குப் பிறகு இளைஞர்களை அதிகம் கெடுத்தவர்களின் பட்டியலில் எனக்கும் இடம் உண்டு.

நான் வசந்தரூபனையும் நன்றாகக் கெடுத்திருக்கிறேன்! மன்னிப்பாராக!

20.8.1981

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/70&oldid=968531" இலிருந்து மீள்விக்கப்பட்டது