- மார்கழியில் பணி...
- சித்திரையில் வெயில்....
காதல் உள்ளங்களுக்கோ எப்போதும் மார்கழி, எப்போதும் சித்திரை. இந்தத் தொகுப்பின் பல பக்கங்களில் மார்கழிப் பனி கொட்டுகிறது; சித்திரை வெயில் கொளுத்துகிறது. என்ன சொன்னாலும் அவ்வளவு எளிதாய்க் காதலை உலகத்திலிருந்து 'பிரஷ்டம்' செய்ய முடியவில்லை. லைலாவையும் மஜ்னுவையும் இலக்கியச் சோலையிலிருந்து விரட்டியடிக்க முடியவில்லை.
'வண்ண நிலவு மட்டும்
ஜன்னலுக்குள் மெல்ல
எட்டிப் பார்க்கிறது
ஒருவேளை
நான் உயிரோடு இருக்கின்றேனா
இல்லை -இறந்துவிட்டேனா
என்று சந்தேகத்தோடு
பார்க்கிறது போலும்'
இது ஒரு மஜ்னுவின் குரல்.
முன்பெல்லாம் நான்
மறுபிறவியை விரும்புவதுண்டு
இப்போதெல்லாம் அதைக்
கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை
காரணம் வரும் பிறவியிலும்
பிரிவு வருமல்லவா
அதனால் தான்.
இது ஒரு லைலாவின் குரல். இதுவே இங்கே கேட்கும் மித்ராவின் குரல். தாபம், தாகம், ஏக்கம், ஏமாற்றம் - இவற்றை ஆண்குரலில் கேட்டுக்கேட்டு அலுத்துப்
71