போய்விட்டது; ஒரு பெண் குரலில் கேட்கவேண்டும் என்று என்னுள் ஒர் அற்ப ஆசை. மித்ராவின் மின்னல் குரலில் வசப்படலாம் என்று நினைத்ால் இடையில் ஆணின் இடிக்குரல் வந்துது மோதுகிறதே! (தொலைபேசி யில் சில நேரங்களில் சம்பந்தமில்லாத குரல் கேட்பது போல)
ஆதர்சம் கூடாது என்பதல்ல, வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் பின்பற்றி எழுதுவதுதான் ஆதர்சம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது.
ஆரம்ப நாட்களில் பாரதிக்குக் கூட ஷெல்லி ஆதர்சம். எனினும் அவன் ஷெல்லியை அப்படியே பின்பற்ற வில்லை. பின்பற்றியிருந்தால் எழுதுகோல் தெய்வம். என் எழுத்தும் தெய்வம்' என்று ஒரு மகாகவியாய் உயர்ந்திருக்க முடியாது.
ஒரு மாதிரி இன்னொரு மாதிரியை உருவாக்க வேண்டும்; ஒரே மாதிரிகளை உற்பத்தி செய்யக்கூடாது.
இப்போதைக்கு மித்ராவுக்கு நான் (கொஞ்சம்) ஆதர்சமாக இருக்கலாம். என் கனவுகளைத் தொட்டு எழுதியிருக் கலாம்... அவர் பேனா...
தொட்டெழுதும் பேனாவாக இருக்கலாம்.
இனி-
உன்னதமான உணர்வுகளைஉயிர்த்துடிப்போடு எழுதும் ஊற்றுப் பேனா ஆகட்டும்.
33.5.1981
72