உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவானந்தப் பெருமாள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டான் என்று கேள்விப்பட்டதும் திரவியின் மனம் படாத பாடு படுகிறது. ஏன் தன்னுடைய அக்காவுக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற எண்ணம் திரவியின் உள்ளத்தில் துளிர்க்கிறது. மூட நம்பிக்கை அனைத்தையும் ஒட்டுமொத்தமாய்த் தன்னகத் தில் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் திரவிக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்ற அவனது கல்வியும் சமூக மாறுதலும் தூண்டுகோல்களாக அமைகின்றன.

ஆம்! திரவி எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சிக்குச் சேர்கிறான். அதில் தேறியதும் ஒரு தனியார் பள்ளியில் பணம் கொடுத்து வேலை பெறுகிறான். பின்னர் அரசினர் பள்ளியில் வேலை கிடைக்கிறது.

அங்கே மோசஸ் வாத்தியாரின் அரவணைப்புக் கிடைக் கிறது. அவர்தான் தன் மனைவி டாக்டர் ரோசம்மையிடம் திரவியின் அக்காவைக் கொண்டுவந்து காட்டச் சொல்லு கிறார். அதன்படி எப்படியோ நாகுவை டாக்டரிடம் கொண்டுவந்து சேர்க்கிறான். நாகம்மையிடம் எந்த உடற் குறையும் இல்லை; சிவானந்தன்தான் ஆண்மையற்றவன் என்பது தெளிவாகிறது. திரவி நேரடியாகவே சிவானந்தப் பெருமாளிடம் சென்று தன் அக்காவை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று வலியுறுத்கிறான். 'ஏற்காவிட்டால் என் அக்காவைக் குற்றாலத்திற்கு மறுமணம் செய்து வைக்கவும் தயங்கமாட்டேன்' என்றும் சொல்லிவிட்டு வந்து விடுகிறான்.

நாகு அக்காவுக்கும் குற்றாலத்திற்கும் திருமணம் நடத்தி விடுவது என்று வீட்டில் எல்லோரையும் சமாதானப்படுத்தி வைத்திருந்த திரவிக்கு ஒரு பேரிடி முடிவில் காத்திருக்

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/76&oldid=969441" இலிருந்து மீள்விக்கப்பட்டது