பக்கம்:முகவரிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறது. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைவதைப்போல.

அன்று சொள்ளை மாடன் கோவிலில் கோடைச் சிறப்பு விழா நடக்கிறது. ஒட்டன் துள்ளல், கதகளி, நையாண்டி மேளம் எல்லாம் நடக்கின்றன. ஆனால் திரவி போக வில்லை. அப்போது நையாண்டி மேளம் பெரும் இரைச்ச லாகக் கொட்டப்படுகிறது. கொஞ்ச நாட்களாகச் சித்த சுவாதீனமில்லாமல் இருக்கும் சிவானந்தப் பெருமாள் 'ஒ' என்ற அலறலுடன் ஒடிப் பக்கத்தில் இருந்த பாழுங் கிணற்றில் விழுந்து விடுகிறான். அந்தப் பாழுங்கிணற்றில் அந்த இரவில் இறங்குவதற்கு எல்லோரும் அஞ்சிய நிலையில் குற்றாலத்தின் காலில் போய் விழுகிறாள், ! சிவானந்தத்தின் இரண்டாவது மனைவி வடிவு. இரக்கங் கொண்டு கிணற்றில் இறங்கிய குற்றாலம் திரும்பவில்லை. விடிகிறது. கிணற்றில் விழுந்தவர்களை வெளியே கொண்டுவரும் வேலை நடக்கிறது. சிவானந்தம் மட்டும் பிழைத்துக் கொள்கிறான். குற்றாலம் பிணமாக எடுக்கப் படுகிறான். செய்தி அறிந்த திரவி அங்கே ஓடி வருகிறான். 'போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகு பிரேதம் தரப்படும்' என்று காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்துகிறார், திரவியை.

திரவி கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்விப்படுகிறான், சிவானந்தப் பெருமாள் பைத்தியமாக நடித்துத் தன் இரண்டாவது மனைவியின் உதவியுடன் (கிணற்றில் குதித்து அங்கே ஒளிந்திருந்து) குற்றாலத்தைப் பழிதீர்த்துக் கொண்டான் என்று.

கடைசியில் இரணியல் கீழைத் தெருவை விட்டுத்தன்தாய் தந்தையுடனும் நாகு அக்காவுடனும் திரவி வெளியேறுகிறான்.

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/77&oldid=969445" இலிருந்து மீள்விக்கப்பட்டது