பக்கம்:முகவரிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒட்டியிருப்பதால் அவர்கள் கோடித்துணி உடுத்தி ஒனம் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் ஒட்டுறவையும் காணமுடிகிறது.

இந்த நாவல் வழக்கொழிந்த பல சொற்களுக்குப் புத்துயிரளித்துள்ளது. 'சொட்டையிலேயுள்ள சீலம்தானே சுடலைவரை' (தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்) என்பது போன்ற பழமொழிகளையும் நினைவுபடுத்து கிறார். 'வார்த்தைகள் புதிதாய்ச் செய்தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில் நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சப் பேர்களுக்கிடையிலாவது வாழையடி'வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களைச் சுவீகரித்துக் கொள்வதால் நம் மொழியின் தூய்மையோ புனிதமோ ஒன்றும் கற்பழிந்து போய் விடாது.' என்பது நீல. பத்மநாபன் எண்ணம். அந்த எண்ணம் இந்த நாவலில் ஈடேறியிருக்கிறது.

ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள், ஆசார அனுஷ்டா 'னங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றைச் சிந்தாமல், சிதறாமல் சேகரித்துத் தருவதால் மனித இயலாரின் (Anthropologists) கவனத்துக்குரிய நூல்களில் 'தலைமுறைகள் குறிப்பிடத்தக்க இடம்பெறும். ஒரு சிறுகதை வித்து, இங்கே ஒரு பெரிய ஆலமரமாய் விழுது விட்டுப் படர்ந்து நிற்கிறது. கம்பீரமாய் காலங்காலமாய் விளங்கும் வகையில் 'கலாபூர்வமாய்'ப் படைக்கப் பட்டிருக்கிறது. எனவே தலைமுறைகள்' தமிழ் நாவல் வரலாற்றில் முதன்மையான இடம்பெறும்.

இந்த நாவலில் நீல. பத்மநாபன் தன் முகத்தை நீட்டிக் காட்டி எந்த இடத்திலும் முழக்கம் செய்யவில்லை. எந்த பாத்திரத்தையும் சர்க்கஸ் மாஸ்டரைப் போல் வேலை

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/79&oldid=970644" இலிருந்து மீள்விக்கப்பட்டது