மற்றவர்கள் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் கடந்தகால நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் மொத்தமாகச் சொல்லி விட்டு நிகழ்காலத்திற்கு வருவார்கள். நீல.பத்மநாபனோ இவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரடி முன்னோக்கிச்செல்லும் கதையை ஒன்பதடி பின்னோக்கிச் செல்லவும் வைக்கிறார். கரைக்கு வரும் அலைகள் நடுக்கடலுக்குத் திரும்புவதுபோல் ஒரு கலையழகோடு இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இவையெல்லாம் சேர்ந்துதான் தலைமுறைகளைஒரு அசா தாரணமான நாவலாக ஆக்கியிருக்கின்றன. நனவோடை உத்தி, வட்டாரவழக்கு நடை, வருணனை போன்றவற்றை மட்டும் வியந்து ஆசிரியரின் ஆழ்ந்த நோக்கங்களைக் காணத் தவறுவது ஒரு உன்னதமான கலைஞனின் அக தரிசனத்தைக் காணத் தவறுவது ஆகும். பேராசிரியர் நா.வானமாமலை சொல்வதுபோல் வடையை உண்ணா மலை துளையை எண்ணுவதாகும்.
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்கும் மகத்தானப் பணியில் ஒவ்வொரு படைப்புக் கலைஞனுக்கும் பங்கு உண்டு. நீல.பத்மநாபன் இந்தப்பணியை ஓசைப்படாமல் செய்து முடித்திருக்கிறார்.
உண்ணாமலை ஆச்சி போன்ற பழைய தலைமுறை 'செட்டிப் பயகுடி கெட்டுப்போச்சு' என்று அங்கலாய்த்துக் கொண்டாலும் திரவி போன்ற புதிய தலைமுறையைச் சார்ந்த இளைஞனால் ஒரு சமூகத்தை உயர்த்த முடியும் என்ற உத்தரவாதம் கிடைக்கிறது. 'குலப்பெருமை, குலத் தூய்மை, என்று பெரியோர்கள் 'பேசிக்கொண்டிருந்
80