தாலும், மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்காக இருக் கின்ற காரணத்தால் சமூகத்தின் அலைக்கழிப்புகளிலிருந்து தப்ப முடியாது என்று உணருகிறான் திரவி. நொந்து போயிருக்கும் தந்தையின் சுமைகளை - பொறுப்புக்களை அவர் கூறாமலே ஏற்கிறான்; தந்தையால் முடியாததைத் தான் செய்யத்துடிக்கிறான். தமக்கைக்கு மறுமணம் செய்து வைக்க முயலுகிறான். தன் குடும்பத்தாரையும் இணங்க வைக்கிறான்.
திரவியின் நோக்கத்துக்குக் குற்றாலமும் துணைநிற்கிறான். திரவியின் தமக்கையைத் திருமணம் செய்தால் இந்தச் சமூகம் தன்னைத் தள்ளிவைத்துவிடுமே என்று அவன் அஞ்சவில்லை. சிவநாதப் பெருமாளைத் தள்ளி வைக்காத இந்தச் சமூகம், தன்னைத் தள்ளி வைப்பதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை.
உண்மையில் திரவியும் குற்றாலமும் மாறுதல் விரும்பும் புதிய சமூகத்தின் பிரதிநிதிகளாகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் தானாய் மாறாது; திரவி போன்ற, குற்றாலத்தைப் போன்ற கர்ம வீரர்களால், தியாக வீரர்களால்தான் மாற்றம் பெறும் என்ற தொனி நாவலின் இறுதியில் அடக்கமாகக் கேட்கிறது.
ஷியாம் பெனகலின் திரைநாவலான 'அங்குர்' சமூக மாறுதலைக் குறிப்பாக உணர்த்துவதை நீல.பத்மநாபனின் தலைமுறைகளின் கடைசிக் காட்சியோடு ஒப்பிடத் தோன்றுகிறது. புதிய தலைமுறையின் இளங் குருத்தான 'அங்குர்' சிறுவனின் நியாயமான கோபம் திரவியிடத் திலும் குடிகொண்டிருக்கிறது. அதனால் அவன் கொண்ட கொள்கையில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையில் நாவல் முடிகிறது.
81