பக்கம்:முகவரிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னும் சிறுகதைத் தொகுப்பின் முதற் கதையிலே இடம்பெறும் இவ்வரிகள், இமயம் முதல் குமரி வரை உள்ள ஒரு தீராத பிரச்னையை நம் கண் முன்னர் விசுவரூபமாக்கிக் காட்டுகின்றன. 'குரோட்டன் செடிகள்' என்னும் இம்முதற் கதையின் நாயகி ஜோதி எம்.ஏ. பி.எச்.டி; பருவத்தில் பயிர் செய்யும் வாய்ப்பிழந்தவள். அவள் தங்கை விஜயாவோ துணிச்சல்காரி, தனக்குப் பிடித்தவனோடு பதிவுத் திருமணம் செய்துகொண்டு வாழப் போய்விடுகிறாள். ஜோதியால் அப்படிப் போக முடியுமா? மாதா மாதம் அவள் வாங்கி வரும் சம்பளத்தை நம்பியிருக்கும் ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியரான அவள் தந்தையும் தாயும் மற்றுமுள்ள சகோதர சகோதரிகளும் அவளைப் போக விடுவார்களா? அவள் கொடுக்கிற தெய்வமல்லவா? அதனால்தான் ஒவ்வொருவரும் போட்டி போட்டு அவளைக் கொண்டாடுகிறார்கள்; அவளுக்குப் பணிவிடை செய்கிறார்கள். பாசங்காட்ட வேண்டிய தாய்கூட எவ்வளவு மரியாதை காட்டுகிறாள்!

"தற்போதைக்கு எங்கள் குடும்பத்தை நான்தான் பாதுகாக் கிறேன். அதனால்தான் வீட்டில் எல்லோரும் என்னை தேவதையாகக் கவனித்துக் கொள்கிறார்கள்' என்கிறாள் ஜோதி. உண்மைதான். யாரும் அவளைப் பெண்ணாகக் கருதவில்லை; உணர்ச்சியற்ற கல்லாகக் கருதுகிறார்கள் என்பதை ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார்.

'பூ மல்ர்ந்த செடிகளுக்கிடையில் அந்தக் குரோட்டன் செடிகள் ஏன் வெறித்துக் கிடக்கின்றன என்று எனக்குப் புரிந்தது. செடிக்கு எப்படிப் பூக்கள், காய்கள் அழகைத் தருகின்றனவோ அப்படித்தான் பெண்களுக்குத் திருமணம், தாய்மை ஆகியவை அழகையும் நிறைவையும் தருகின்றன... அந்த இன்ப அனுபவங்களினின்றும்

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/85&oldid=969605" இலிருந்து மீள்விக்கப்பட்டது