பக்கம்:முகவரிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதுக்கப்பட்ட நாங்களெல்லாம் குரோட்டன் செடிகளுக்கு ஒப்பானவர்களே.'


என்று தன் வாழ்வில் வராத வசந்தத்தை எண்ணிப் பெருமூச்சு விடுகிறாள் பல்கலைக்கழக ரீடர் ஜோதி. வள்ளுவரும் ஜோதியைப் போன்ற 'முதிர் கன்னி' களுக்காக இரங்கித்தானோ என்னவோ,

   'அதற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றான் தமியள்குத் தற்று'

என்று அன்றே அவர்களை உவமையாக்கிக் காட்டியிருக் கிறார்!

பரிமளா சோமேஸ்வரின் 'குரோட்டன் செடிகள்' சம்பளம் வாங்கும் 'சராசரி'களின் - நடுத்தர வர்க்கத்தினரின் அவல வாழ்வை மிகையின்றிக் காட்டுகிறது. நடுத்தர வர்க்கத்தி னரைக் குட்டி பூர்ஷ்வாக்கள் என்று குறிப்பிடுவதுண்டு. இவர்கள் எவ்வளவுதான் கீழே கீழேப் போய்க் கொண்டி ருந்தாலும் முதலாளித்துவக் கனவுகளில் மூழ்கி மிதந்து மேலே பறக்கச் சிறகு தேடித் திரிபவர்கள்; ஆசைகளை அடைய முடியாது அந்த ஆசைகளிலேயே ஆயுளை முடிப்பவர்கள். இவர்களை மையமாக வைத்து எழுதப் பட்ட பல கதைகளை இத்தொகுப்பில் பார்க்க முடிகிறது. எனினும் 'குரோட்டன் செடி'களைப்போல் நடுத்தர வர்க்கத்தின் ஆற்றாமையைச் சித்தரிக்கும் இன்னொரு அற்புதமான கதையை இந்தத் தொகுப்பில் மட்டுமல்ல, வேறு எந்தத் தொகுப்பிலும் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

எந்த மறுவாழ்வும் இல்லாத இரண்டு இரயில் பிச்சைக்காரர் களைப் பற்றிய கதைதான் 'சுழிப்பு'. அவர்கள் இருவரும் அவனும் அவளும் தாம். பருவம் ஊனமாகாத அவளுக்குக்

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/86&oldid=970645" இலிருந்து மீள்விக்கப்பட்டது