இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சில வரிகள்
இந்த நூலில் உள்ள 'தலைமுறைகள்', தமிழ் நாவல் நூற்றாண்டை ஒட்டி வெளிவந்துள்ள 'தமிழ் நாவல் - ஐம்பது பார்வை' என்னும் கட்டுரைத் தொகுப்பிலும் 'அடுத்த வீடு' 'தீபம்’ இதழிலும் வெளிவந்தவை. மற்றவை அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் பல நூல்களுக்கு என்னால் எழுதப்பெற்ற முன்னுரைகளே... முகவரிகளே!
கடிதத்துக்கு முகவரி எப்படியோ அப்படி ஒரு நூலுக்கு முன்னுரை அவசியம்.
அவசியம் என்பதை உணரமுடிகிறதே ஒழிய, 'ஒரு வாரத்தில் முன்னுரை வேண்டும்’ என்று கேட்கும் ஆர்வமுள்ள நண்பர்களின் அவசரத்தை என்னால் உணர முடியவில்லை; உதவ முடிவதில்லை.
எப்படியோ என்னிடம் முன்னுரை வாங்கியவர்கள் பாக்கியவான்கள்.
இந்த நூலுக்கு நானே ஒரு மகத்தான முன்னுரை எழுத வேண்டும்... பெர்னாட்சா ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அது பலிக்கவில்லை.
7