பக்கம்:முகவரிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட அரசியல் நோக்கும் உலகளாவிய பார்வையு மிருந்ததால் பாரதியால் ரஷ்யப்புரட்சியை வரவேற்றுப் பாட முடிந்தது. பாரதிதாசனால் காப்பிடலிசம், கம்யூனி சம், சோசலிசம், நாசிசம், பாசிசம் ஆகியவற்றுக்கு ஆசிரியப் பாவில் விளக்கம் தரமுடிந்தது. இன்றைய இளங்கவிஞர்களோ அவர்கள் காலத்தைவிட நாளுக்கு நாள் அறிவியல் பூர்வமாக முன்னேறிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்வதால் விசாலப் பார்வையால் உலகை விழுங்க முடிகிறது.

இவர்கள் பார்வையிலிருந்து எந்தப் பொருளும் தப்ப முடிவதில்லை. துவாபரயுகத்துக் கண்ணனும், 'தோரகா' திரைப்படமும் கவிதையில் இடம்பெறக் காரணம் இது தான். எந்தப் புராணக் கருத்துக்களும் கவிதைகளும் சமுதாயக் கேடுகளாகக் கருதப்பட்டு வந்தனவோ அந்தப் புராணத் துணுக்கு ஒன்று எவ்வளவு அழகு பொருந்திய கவிதையாகிறது பாருங்கள். ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரப் பகீரதன் முயன்றான். இது புராணக் குறிப்பு இதைக்கவிஞர் சோசலிசத்தோடு இணைத்துச் சொல்லும் வகையே தனி.

    சோசலிசம்.......
     "பாதாளத்திலிருப்போர் பருகுவதற்காய்
      ஆகாச கங்கையை அழைத்துவர நடக்கும்
      பல்லாண்டு காலப் பகீரதப் பிரயத்தனம்!'

அத்தோடு விட்டாரா? புராண காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்.

 "படிக்காதவன் கையிலும் பத்திரிக்கை இருப்பதுபோல் பிடிக்காதவன் நாக்கும் பேசுதய்யா சோசலிசம்' என்கிறார்.

இன்னொரு கவிதையில் ஆடையின்றித் தவிக்கும் பிச்சைக்காரி ஒருத்தியின் சோகத்தைச் சித்திரிக்கிறார். அவள்

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/94&oldid=970651" இலிருந்து மீள்விக்கப்பட்டது