பக்கம்:முகவரிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவலத்தைப் போக்காமல் 'மடி நிறைய காசுடையோர்துர நின்று ரசிக்கிறார்களாம். ஏன் ரசிக்க மாட்டார்கள்?' அரை நிர்வாணம் சொர்க்கமென்போர் முழு நிர்வாணம் காண்கையிலே முகத்தையா மூடிடுவார்' என்று கவிஞர் கருணையற்ற பிறவிகள் மீது நெருப்புக்கணை தொடுக் கிறார். இக்கவிதைக்கு அவர் கொடுத்துள்ளதலைப்பு 'பாரி முனை நிற்கையிலே!' எத்தனை அருமையான ஏளனம்!.

இறுதியாக ஒன்று. யாப்பிலக்கண மரபை உடைப்பதையும், கம்யூனிசத்தைப் பற்றிப் பாடுவதையும், சர்வதேசிய மனப்பான்மை உடையவராய்த் தம்மைக் காட்டிக்கொள் வதையும் ஒரு 'பாவனை'யாக்கிக் கொண்ட இன்றைய இளம்-புதுக் கவிஞர்களுக்கிடையே, இவர் உண்மையான மனிதாபிமானமும், உடைமை பொதுவாக்கும் உயர்ந்த நோக்கமும், எங்கெல்லாம் நிலப் பிரபுத்துவ, ஏகாதி பத்திய, ஏகபோக உரிமைகள் தலை தூக்குகின்றனவோ அங்கெல்லாம் கவிதைக்குரல் எழுப்பி அவற்றின் தலைமீது அடிக்கும் தைரியமும் உடையவராய் இருப்பார் என்று நம்புகிறேன். அதற்கு இந்நூலில் போதிய அறிகுறிகள் தென்படுகின்றன.

கவிஞர் காமராசனைத் துரோணராகக் கொண்டு எழுது கோல் ஏந்திய புதுக்கவிதை ஏகலைவர் பலர், அவரது வெற்றியைத் தவறாகப் புரிந்துகொண்டோ என்னவோ வடசொற்களை வாரி வழங்குவதில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போடுகிறார்கள்.

இதில் முத்துராமலிங்கமும் முன்னுக்கு நிற்க வேண்டுமா?


1972

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/95&oldid=969615" இலிருந்து மீள்விக்கப்பட்டது