பாழவதற்குப் பதில் ஒரு பகுதி பாழகலாமே. அதனால் பாதகம் ஒன்றும் இல்லையே!' - இப்படிப் புலம்பின சில.
'உலகத்தின் பழமையான (Oldest Profession of the world) அது தானே' என்று பிலாக்கணம் பாடின இன்னும் சில.
பழம்பெருமை உடைய தமிழகத்தில் இந்தப் 'பழந் தொழில்' மட்டும் இல்லாமல் இருந்திருக்க முடியுமா என்ன? இருந்தது. உடல் விலை வணிகப் பெண்கள் எங்கணும் நீக்கமறப் பரவி இருந்தனர்.... அப்படிப் பரவி இருந்ததால்தானோ என்னவோ 'பரத்தையர் ஆயினர்.
நிலப் பிரபுத்துவத்தின் முகத்தில் படர்ந்த பரத்தைமைத் தொழுநோய் இந்தப் பாருக்குள்ளே நல்ல நாட்டில்’ மட்டுமல்ல, பூமண்டலத்தின் எல்லாப் பகுதிகளிலுமே தொற்றிக் கொண்டிருக்கிறது.
பெரும்பகுதிப் பெண்களின் கற்பை இன்சூர் செய்வதற் காக ஒரு சிறுபகுதிப் பெண்கள் தங்கள் உடலை விற்றுப் 'பிரிமியம் செலுத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காலங்காலமாய் ஒட்டியிருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைக்க - கறையைப் போக்க அவ்வப்போது சிலர் அவதரிக்கிறார்கள்.
மேரி மக்தலேனாவை மன்னித்து அருள் பாலிக்க ஒரு ஏசு வந்தார்.
'மதவெறியரின் வெறிச் செயல்களுக்குப் பலியான மங்கையரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்னருமை இளைஞர்களே! என்று துணிந்து சொல்ல ஒரு மகாத்மா வந்தார். இங்கே ஒரு மகாத்மாவை
96