பக்கம்:முகவரிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 'அழுக்கின் ஒரு துளி தூசும்
    படியாத
    ஒர் ஆத்மா'வைக்

கரை சேர்க்கும் ஒரு மகாத்மாவைச் சாமானிய மனிதர் களிடையே அவதரிக்க வைக்கிறார் என் மரியாதைக்குரிய கவிஞர் சிற்பி.


சிற்பியின் 'நெஞ்சின் சுமை', இறக்கி வைக்கப்பட்டுள்ள இந்த 'மெளன மயக்கங்களின்' 'அவன்' 'முதல் தேதிப் பரபரப்பில் பை கனத்த கனவான்'

அவள் 'ஜீவனையே சிலிர்க்க வைக்கிற ஆச்சரியம்' 'பருவம் சிங்காரித்த பதுமையாய்' இருந்த அவளைத் தெருவில் விற்கும் பலகாரக் கூடையை ஈ மொய்ப்பதுதுபோல்' கண்கள் மொய்க்கின்றன.

காலம் அவனை இரவுச் சந்தைக்கு இழுத்து வருகிறது. அங்கே அவளைப் பெண் பார்க்க வருகிறான் அவன். கண்டதும் அவனுள் எலக்ட்ரிக் கிதாரின் இன்ப அதிர்ச்சிகள். இளமைத் திமிரில் வாடகை பேசி ஒரு புது பார்ட்டி"யாக வருகிற அவனும் கற்புக்குக் கடை திறந்து காத்திருக்கும் அவளும் முதலில் சந்திக்கும் இடம் மோகத்தின் அடிவாரம்....

   'மோக... மோகம். மோகம்'

இருவரும் சென்றடைவதோ- சேர்ந்து தொடுவதோ தெய்விகக் காதலின் சிகரம்.

மோகம் தானே காதல் மாளிகையைத் திறக்க உதவும் திறவுகோல்!

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/98&oldid=970652" இலிருந்து மீள்விக்கப்பட்டது