உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    மோகத்திலிருந்து
    நம்மைக்
    காதலுக்கு அழைத்தது
    எந்த நாள்?
    எந்தப் புனிதப் பொழுது?


என்று அவன் கேட்கும்போது நாம் உணர்ச்சி வசப்படுகிறோம்.


முதலில் அவர்கள் சேர்க்கை


   'நெகிழ்ந்த சேறும்
    முரட்டு விதையும்
    ஒன்றில் ஒன்று
    உறவு கண்டது போல்'

அருவருப்பாகத் தோன்றுகிறது. பிறகு அதில் ஆயிரங்காலத்துப் பயிர் - தேவமணிப் பயிர் செழித்து வளர்வது தெரிகிறது.

    இருவரும் சிரிக்கிறார்கள்.
   'சிரிப்பும் சிரிப்பும்
    பெருக்கெடுக்கும்போது
    தரையில் நழுவி விழுந்தது வானம்

என்கிறார் சிற்பி.


ஓ... வானம் கடந்த அண்டவெளியில் மேனிச் சுகம் கடந்த ஞானவெளியில் இருவரும் சிறகடித்துப் பறக்கிறார்கள்.

நாம் பரவசப்படுகிறோம்.

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/99&oldid=970653" இலிருந்து மீள்விக்கப்பட்டது